உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆந்திராவில் 72 மணி நேரத்தில் கட்டட அனுமதி: தமிழகத்தில் மட்டும் 60 நாட்கள் இழுத்தடிப்பது ஏன்?

ஆந்திராவில் 72 மணி நேரத்தில் கட்டட அனுமதி: தமிழகத்தில் மட்டும் 60 நாட்கள் இழுத்தடிப்பது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு, 72 மணி நேரத்தில் ஒப்புதல் வழங்கும் திட்டத்தை ஆந்திர அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் கட்டட அனுமதி பெற, 60 நாட்கள் ஆவதாக கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர். பொது கட்டட விதிகளின் அடிப்படையில், அடுக்குமாடி கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளை 30 நாட்களில் முடிக்க வேண்டும் என, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் ஒற்றை சாளர முறையில் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி திட்டங்களுக்கு குறைந்தபட்சம் 60 நாட்களில் ஒப்புதல் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவில் சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. அதை முன்மாதிரியாக வைத்து, தமிழகத்தில் சுயசான்று கட்டட அனுமதி திட்டம், கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது, ஆந்திராவில் அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்களுக்கு, விண்ணப்பித்ததில் இருந்து, 72 மணி நேரத்தில், அதாவது மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டுமான துறையினர் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் எப்போது? இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தில் ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில், கட்டட வரைபட ஆய்வு, ஆவணங்கள் மீதான ஆய்வுகளை, ஓரிரு நாட்களில் முடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிற துறைகளின் தடையின்மை சான்று பெறுதல், கூடுதல் விபரம் பெறுதல் ஆகியவற்றில் மட்டுமே தாமதம் ஏற்படுகிறது. ஆந்திரா போன்று தமிழகத்திலும் 72 மணி நேரத்தில் அடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கலாம். தவறான தகவல், ஆவணங்கள் அளிக்கப்பட்டிருந்தால், ஒப்புதல் ரத்து செய்யப்படும் என்பது போன்ற நிபந்தனைகளுடன், இதை செயல்படுத்தலாம். முதல்கட்டமாக, 10,000 சதுர அடி வரையிலான திட்டங்களில், இதை அமல்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்துக்கு தேவை தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: சுயசான்று முறை கட்டட அனுமதி போன்று, அடுக்குமாடிகளுக்கு 72 மணி நேரத்தில் ஒப்புதல் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தலாம். தொழில்நுட்ப ரீதியாக இதற்கு தேவையான கட்டமைப்புகள் தயாராக உள்ளன. அதிகாரிகள் நிலையில் ஏற்படும் தாமதங்களை தவிர்த்தால், தமிழகத்திலும் 72 மணி நேரத்தில் கட்டட அனுமதி வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சாத்தியமாகும்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான நாட்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். தற்போதைய நிலவரப்படி, 50 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் ஒப்புதல் வழங்கலாம் என அரசு முடிவு எடுத்தால் தான், இந்த நடைமுறை தமிழகத்தில் சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
ஆக 15, 2025 20:23

தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆகையால் 72 மணி நேர கட்டட அனுமதி சாத்தியமே இல்லை.


A P
ஆக 15, 2025 19:08

இந்த செய்தியைப் பார்த்து அனைவரும் ஊழலற்ற தமிழக ஆட்சியாளர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். நீங்களெல்லாம் மறந்துவிட்டீர்கள் போலும். டீ சதுரம் நிறுவனத்துக்கு ஓரிரு நாட்களில், அனைத்து அரசு ஒப்புதல்களும், தலைவணங்கித் தந்ததையெல்லாம் சுலபமாக மறந்து வசை பாடுகிறீர்களே. இது நியாயமா ? பைசா செலவு வைக்காமல், அந்த நிறுவனத்துக்கு ஒப்புதல் தந்ததையும் மறக்க வேண்டாமே.


murugan
ஆக 15, 2025 18:21

இந்த 60 நாட்கள் பேரம் பேசி காசு பார்ப்பதற்கு. இந்த அரசு லஞ்சத்தை ஊக்குவிக்கும் அரசு. எந்த அரசு அலுவலகத்திலும் காசு கொடுக்காமல் ஒரு வேலையையும் நடப்பது இல்லை. இது எனது அனுபவம். அரசுக்கு ஒன்லைனில் 400 ரூபாய் செல்லும் அனால் லஞ்சமாக 5000 ரூபாய் கொடுக்கவேண்டும். இதுதான் இந்தியா நிலை.


Rathna
ஆக 15, 2025 17:34

மஞ்ச பைய பச்சயப்பனுக்கு கொடுக்கலேன்னா ஒரு ஒப்புதலும் கிடைக்காது. ஒரு சமையல் அறைக்கு, இவ்வளவு என்று கணக்கு இருக்கும் போது எப்படி சட்டத்தை மீற முடியும்.


D Natarajan
ஆக 15, 2025 15:26

லஞ்சம் இல்லாமல் எதுவும் நடக்காது. அரசில் வேலை செய்வோர்க்கு சம்பளம் இல்லை என்று அறிவிக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பவர்கள் திட்டாமல், சபிக்காமல் கொடுப்பது இல்லை. லஞ்சம் வாங்குபவரின் குடும்பத்தை நினைத்தால் பாவமாக இருக்கிறது.


visu
ஆக 15, 2025 16:08

அதெல்லாம் ஒன்றும் இல்லை மாப்பிளை அரசு வேலை கிம்பளமே நிறைய வரும் என்று பொண்ணு பார்க்கும் பொது சகஜமா பேசுகிற நிலையில் இருகோம்


Vasan
ஆக 15, 2025 14:29

In Tamilnadu they verify all drawings and documents before giving approval. Hence it takes time. Let there not be any bypass of those procedures. We must question why Andhra gives approval within 3 days and not Tamilnadu.


palaniappan. s
ஆக 15, 2025 11:38

ஏன் எங்க வயித்தில அடிக்கப் பார்க்கிறீங்க- திருட்டு தீ மு க


VENKATASUBRAMANIAN
ஆக 15, 2025 08:10

அப்போதுதான்கட்டிங் கரெக்ட்டாக போய் சேரும். இதுதான் திராவிட மாடல்


Ram
ஆக 15, 2025 06:45

எல்ல பேப்பரும் சரியாக இருந்தாலும் லஞ்சம் வாங்காமல் எதுவும் கொடுப்பதில்லை. இப்போது அரசுத்துறைகளில் எழுபது சதவிகிதம் இடவொதுக்கீட்டில் வந்தோர் உள்ளனர் , இவர்கள் எதுபற்றியும் கவலைப்படாமல் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்ய லஞ்சம் வாங்கி அதில் கட்டிங் கொடுப்பதைய வேலையாக வைத்துள்ளனர்


vivek
ஆக 15, 2025 05:41

கட்டிங், கமிஷன், கரப்பஷன்.....திமுக ஜெகத்ஜில்லா கில்லாடிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை