உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்; தங்கதமிழ்செல்வன் புறக்கணிப்பு ஏன்

தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்; தங்கதமிழ்செல்வன் புறக்கணிப்பு ஏன்

சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. அதில், தேனி வடக்கு மாவட்டச் செயலரும், எம்.பி.,யுமான தங்கதமிழ்செல்வன் பங்கேற்கவில்லை. சமீபத்தில், தன்னை அவமதித்த மாவட்ட நிர்வாகிகள் மீது, தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்கும் என, தங்கதமிழ்செல்வன் எதிர்பார்த்தார்; ஆனால், தலைமை கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தங்கதமிழ்செல்வன், மாவட்டச் செயலர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்துள்ளார். இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சியின் மேடையில் தங்க தமிழ்செல்வனும், ஆண்டிபட்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., மகாராஜனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். அநாகரிகமான வார்த்தைகளை பேசி, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கட்சித் தலைமைக்கு சென்றதும், மகாராஜனை அழைத்து தலைமை கண்டிக்கும் என, தங்கதமிழ்செல்வன் எதிர்பார்த்தார். ஆனால், கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. அதனால், தங்கதமிழ்செல்வன் அதிருப்தியில் இருந்தார். டில்லியில் இருந்து சென்னை வந்திருந்த அவர், நேற்று மதியம் வரை தங்கியிருந்ததார்; மதியத்திற்கு மேல் தேனி சென்று விட்டார். சென்னையில் தங்கியிருந்தும், மாவட்டச்செயலர்கள் கூட்டத்திற்கு வராமல் அவர் தவிர்த்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

HoneyBee
ஆக 14, 2025 21:43

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி போனால் இது போன்ற ஒரு அவல நிலை வரும்


பேசும் தமிழன்
ஆக 14, 2025 20:35

வரும் தேர்தலில் திமுக தேறாது என்று தெரியவந்ததால்..... அப்பீட்டு


Sun
ஆக 14, 2025 15:19

தங்க தமிழ் செல்வன் ஓ.பி.எஸ் ஐ எதிர்த்து அரசியல் செய்பவர். ஓ.பி.எஸ் க்கு ஸ்டாலின் கொடுக்கும் முக்கியத்துவம் திமுகவுடன் பயணப் பட்டுக் கொண்டிருப்பது அண்ணனுக்கு பிடிக்கல.


கிருஷ்ணதாஸ்
ஆக 14, 2025 12:41

EPSக்கு மற்றுமொரு வெற்றி!. OPS இல்லாத அதிமுக வில், தங்கத்தமிழ் செல்வன் ஐக்கியம்!!


Dv Nanru
ஆக 14, 2025 12:11

தவறான கட்சியில் சரியான நபர் தங்கத்தமிழ்செல்வன்... ஒத்தவரியில் இப்படி தான் சொல்லமுடியும் ..


M S RAGHUNATHAN
ஆக 14, 2025 10:55

இது ஸ்டாலினுக்கு மறைமுக எச்சரிக்கை. OPS ஐ ஆதரித்தால் தான்.திமுகவில் இருக்கமாட்டேன் என்று சூசகமாக சொல்கிறார்.


பிரேம்ஜி
ஆக 14, 2025 07:30

புறக்கணிக்க வில்லை! வயிற்றுப் போக்கால் அவதி!


raja
ஆக 14, 2025 07:14

இனி இந்த திருட்டு திமுக அம்பது வருஷம் ஆனாலும் ஆட்சிக்கு வராதுன்னு தெரிந்து விட்டதால் அடுத்த கட்சியில் துண்டு போட ரெடி ஆயிட்டாரு....


Mani . V
ஆக 14, 2025 06:40

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதே


kamal 00
ஆக 14, 2025 06:16

அட அதிமுக வுக்கு ஓட ரெடி ஆகிட்டாப்ல,.. ஒபிஸ் இவரு போற இடமெல்லாம் வந்து கிட்டே இருக்காரு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை