உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு? அமைச்சர் மகேஷ் கேள்வி

செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு? அமைச்சர் மகேஷ் கேள்வி

சென்னை : ''செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு?'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கேள்வி எழுப்பினார்.சென்னை கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், தனியார் பள்ளி தமிழாசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இது, ஆசிரியர்களுக்கான பயிற்சி என்றால் பொருத்தமாக இருக்காது. இது, நம்மை நாம் புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு அல்லது சுயமதிப்பீடு என்பதே பொருத்தமாக இருக்கும்.

சவால்தான்

தற்போதைய தலைமுறை குழந்தைகள், ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்பதற்கு கூச்சப்பட்டு, செயற்கை நுண்ணறிவிடம் கேள்வி கேட்கின்றனர். என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், வகுப்பறையில் மாணவர்களின் முன் நின்று, அவர்களின் உணர்வுகளை புரிந்து பாடம் நடத்தும் ஆசிரியர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.தமிழாசிரியர்களாகிய நீங்கள் தான், தமிழ் மொழியை உயர்த்தி பிடிக்க வேண்டும். தமிழ் மொழியை உயர்த்தி பிடித்தால் தான், நாம் யார், நம் கலாசாரம் என்ன என்பதை, குழந்தைகளால் அறிந்து கொள்ள முடியும். தமிழ் மொழி என்பது, இனத்தின் வரலாறு. 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழன் இரும்பை பயன்படுத்தினான் என்பது பெருமை.ஏற்கனவே, 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை பயன்படுத்திய நாடே, முன்னோடியாக கூறப்பட்ட நிலையில், புளோரிடாவில் உள்ள ஆய்வகம், நம் மாநிலத்தில் கிடைத்த இரும்பே தொன்மையானது என்று சான்றளித்து உள்ளது.கீழடி, ஆதிச்சநல்லுார், கொற்கையை பற்றிய பெருமைகளையும், தொன்மைகளையும் நாம் பேசுகிறோம். அதை, மாணவர்களிடம் எடுத்து செல்லும் பணியை, நாம் பெற்றிருக்கிறோம். ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ் மொழியை கற்பிப்பது கடினமானது. அதை சவாலாக ஏற்று செய்யும் ஆசிரியர்களுக்கு, இந்த பயிற்சி பயனளிக்கும்.

கடமை உண்டு

'செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு' என்ற கொள்கையுடன் இருப்பவர்கள் நாங்கள். தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தி பிடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், உங்களுக்கு உள்ளது. தமிழ் நம் அடையாளமாகவும், ஆங்கிலம் நம் வாய்ப்பாகவும் அமைய வேண்டும். பயன்பாடு வேறு மொழிகளுக்கு இருக்குமெனில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளையுமே விருப்பப்பட்டால் கற்பதற்கு தடையில்லை. ஆனால், கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

கடினம்'

பயிற்சி குறித்து தமிழாசிரியர்கள் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட ஆங்கில வழி பள்ளிகளில், மாணவர்களுக்கு தமிழ் கற்பிப்பது மிகவும் கடினமாக உள்ளது. தமிழ் படித்தால் என்ன பயன் என்று கேட்கின்றனர். அவர்களிடம், ஆங்கில மோகம் அதிகம் உள்ளது.பள்ளிகளிலும், தமிழுக்காக குறைந்த பாடவேளைகள் தான் ஒதுக்கப்படுகின்றன. அதனால், அவர்களுக்கு தமிழ் பாடத்தை நடத்துவது கடினமாக உள்ளது. அவர்களுக்கு கதை வழியாக பாடம் நடத்துவதும் கடினமாக உள்ளது. அந்த அளவுக்கு, தொழில்நுட்பம் மீதான ஆர்வமும், தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கையும் உள்ளது. அதனால், தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்பிப்பதை எளிமையாக விளக்கும் வகையில், புத்தாக்கப் பயிற்சி அளித்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Srinivasan Narayanasamy
ஜூலை 09, 2025 04:07

உங்களுடைய " செம்மொழி ", தெலுங்கானாவை தாண்டி போனால் " ஹாய் மதராஸி " ஆய்டும். வளைகுடா நாடுகளில் " செம்மொழி " படும் பாடு சொல்லிமாளாது .. இது உண்மை . சத்தியம் .


Rajasekar Jayaraman
ஜூலை 08, 2025 23:45

நல்லவர்கள் இருக்க கொள்ளையர்கள் எதற்கு தமிழகத்தில்.


சி ரதி
ஜூலை 08, 2025 18:55

அன்பில் மகேஷ் மகனுக்கு செம்மொழி இருக்க,மும்மொழி எதற்கு..


அப்பாவி
ஜூலை 08, 2025 16:30

இந்தி, இங்கிலீஷ் இரண்டில் இங்கிலுஷே போதும். எங்கே போனாலும் பொழச்சுக்கலாம். இந்தி படிச்சுட்டு வடக்கன்ஸ் இங்கே வந்துடறாங்க.


Ragupathy
ஜூலை 08, 2025 16:14

முதலில் உன் மகன் படிக்கிறாரானா... ஊருக்கு உபதேசம் செய்யும் திருட்டு திராவிடம்...


N Sasikumar Yadhav
ஜூலை 08, 2025 15:43

விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்ட உங்கள மாதிரியான ஆட்களின் குழந்தைகள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் ஏழைகளின் குழந்தைகள் மும்மொழி படிக்க கூடாது என சொல்லும் உன்னய மாதிரியான ஆட்கள் மிக மிக கேவலமான ஜென்மங்கள்


ஆரூர் ரங்
ஜூலை 08, 2025 14:55

இப்போது பத்து மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்று விட்டன. இன்னும் தமிழ்தான் உயர்ந்தது என்று தம்பட்டமடித்துப்பயனில்லை . பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆங்கில வழியில்தான் படிக்கிறார்கள். தமிழை இரண்டாவது மொழியாக படிப்பவர்களும் கூட குறைந்து கொண்டே வருகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு முதல்வர் அளவுக்குகூட தமிழில் பேசவும், எழுதவும் வராது. ஆங்கிலமும் சரியாகப் பேசவராது. டெலிவர் பாய் வேலைக்குதான் லாயக்கு என்ற நிலைமை வந்து கொண்டிருக்கிறது.


surya krishna
ஜூலை 08, 2025 11:51

paiyanukku muthalla advice pannu


lana
ஜூலை 08, 2025 11:13

இந்த நிலைமை க்கு காரணம் யார். தமிழ் மொழியில் படித்தால் வேலை கிடைக்காது தமிழ் க்கு பதிலாக வேறு மொழி French போன்ற மொழியில் படிக்க காரணம் என்ன. 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ் படிப்பு மட்டும் அல்ல தமிழ் வழியில் படிப்பது கேவலமாக நினைக்க வைத்த பெருமை இந்த இரு கட்சிகளும் உண்டு. காரணம் எளிது. தமிழ் தமிழ் என்று பேசுவார்கள் தவிர அவரது பிள்ளைகள் ஐ தமிழ் வழியில் படிக்க வைக்க வில்லை. இதில் ராமதாஸ் மகன் அன்புமணி குழந்தைகள் உட்பட. எல்லாம் சிபிஎஸ்இ icse என்று படிக்க வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். விளைவு இந்த கட்சி மீது இருந்த வெறுப்பு இன்று தமிழ் மீது வந்து விட்டது. இன்று state board இல் முதல் மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழி தமிழ் உட்பட பல. தமிழ் மொழி கட்டாயம் இல்லை. இந்த நிலையில் தாய் மொழியில் கல்வியை கற்க சொல்லும் தேசிய கல்வி கொள்கை வேண்டாம். தமிழே இல்லாமல் படிக்கும் மாநில கல்வி வேண்டும். பாரதி கூறிய மெல்ல தமிழ் இனி சாகும் என்ற வார்த்தையை மாற்றி வேகமாக தமிழ் இனி சாகும் அளவுக்கு உள்ளது இவர்கள் செயல். நெஞ்சு பொறுக்கு தில்லை யே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்


கண்ணன்
ஜூலை 08, 2025 10:36

ஒரு மொழியாவது இவருக்குச் சரியாகத் தெரியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை