உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குற்றவாளி போல நடத்துகின்றனர்; தி.மு.க., நிர்வாகி மீது மனைவி புகார்

குற்றவாளி போல நடத்துகின்றனர்; தி.மு.க., நிர்வாகி மீது மனைவி புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''புகார் கொடுத்த என்னையே, குற்றவாளி போல போலீசார் நடத்துகின்றனர்,'' என, அரக்கோணம் தி.மு.க., முன்னாள் நிர்வாகியால், பாதிக்கப்பட்ட அவரது 2வது மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவி, அரக்கோணம் காவனுாரை சேர்ந்த, தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்த தெய்வசெயல் என்பவரை, ஜனவரி மாதம் திருமணம் செய்தார். ஏற்கனவே திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து, அடித்து துன்புறுத்துவதாகவும், கட்சி பிரமுகர்களின் பாலியல் இச்சைக்கு இணங்கும்படி கொடுமைப்படுத்துவதாகவும், ஏப்ரல், 5ம் தேதி, அப்பெண் தற்கொலைக்கு முயன்றார்.தெய்வசெயல் மீது, ராணிப்பேட்டை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் தெய்வசெயல் முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்நிலையில் புகார் அளித்த அவரின் மனைவி, போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, கவர்னரிடம் மனு அளிப்பதற்காக, நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார்.போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கவர்னர் சென்னையில் இல்லை. கிண்டியில் உள்ள ஆர்.டி.ஓ.,விடம் புகார் கொடுங்கள் எனக்கூறி, பெண் காவலர்கள் அவரை ஆட்டோவில் அழைத்து சென்றனர். ஆட்டோ ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லாமல், கோயம்பேடு நோக்கி சென்றதால், அந்த பெண் எங்கே அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டு, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். பின் தனது ஊருக்கு செல்வதாகக் கூறி, ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கூறியதாவது:

பாதிக்கப்பட்ட என்னையே போலீசார் குற்றவாளி போல நடத்துகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விட்டோம் என்கின்றனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையை கொடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட தெய்வசெயலை அழைத்து விசாரிக்காமல், புகார் கொடுத்த என்னை சுற்றி அதிகாரிகள் அமர்ந்து கொண்டு, தேவையற்ற கேள்விகளை கேட்டு அலைக்கழிக்கின்றனர். எனவே, வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, நீதி பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

BalaG
மே 23, 2025 23:41

அந்த நாயை நடு ரோட்டுல நிற்க வச்சி செருப்பு கல் குப்பைகளை கொண்டு அடித்து சாக அடிக்கணும். எத்தனை தடவை அசிங்க பட்டாலும் திருந்த மாட்டேங்குது


h
மே 23, 2025 21:20

purambokku modal


Kjp
மே 23, 2025 19:02

நெஞ்சு பொறுக்குதில்லையே


kjp
மே 23, 2025 19:00

மக்கள் இதற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சரியான பதில் கொடுக்க வேண்டும்


V Venkatachalam Chennai 87
மே 23, 2025 13:06

பெண்கள் எப்படி இப்படி மாட்டிக் கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. கல்யாணத்துக்கு முன்னாடி தீர விசாரிக்கவே மாட்டார்களா? அவன் கயவன் என்பதை திருமணத்திற்கு முன்பே கண்டு பிடித்திருக்கலாம். திமுக வில் இருக்கிறான் என்றாலே கண்டிப்பா கயவனாதான் இருப்பான். பச்ச புள்ளைக்கி கூட இது தெரியுமே..


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 23, 2025 11:57

படிக்கும் வயதில் படிப்பை மறந்து லெளகீக வாழ்க்கை ஆசை படுதல் காதல் கத்திரிக்காய் வசப்படுதல் பெற்றோர் சொல் மீறி வீட்டை விட்டு வெளியே செல்வது மற்றவர்கள் வாழ்க்கை பார்த்து தானும் அது போல இருக்க நினைப்பது கண்ட நேரங்களில் கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவது போதையின் பாதையில் பயணிப்பது கண்டிப்பவர் நமது நன்மைக்கு தான் சொல்கிறார் என்று புரிந்து கொள்ளாமல் எதிர்த்து பேசுவது நாகரீகம் என்ற பெயரில் பொருந்தாத உடை உடல் அமைப்பை விரும்பி ஏற்பது பெரியோர்களை மதிக்காதது துஷ்டனை கண்டால் தூர விலகாதது எந்த உறவானாலும் நட்பானாலும் அளவறிந்து பழகாதது அடுத்தவர் மேல் பொறாமை போட்டி மனப்பான்மை இகழ்ந்து பேசுதல் மண்ணாசை பெண்ணாசை இவை யாவும் எப்பொழுதும் என்றைக்கும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அழிவை நோக்கியே கொண்டு செல்லும்.


அப்பாவி
மே 23, 2025 10:49

போலீஸ் இவர்களது கைப்பாவை தாயி. பேசாம இந்தியாவில் வேற எங்காவது போய் நிம்மதியா வாழ முயற்சி செய்.


karthik
மே 23, 2025 08:52

அண்ணா பல்கலைக்கழக மாணவியையும் அப்படி தான் நடத்தினார்கள்.. திமுக கும்பலிடம் யார் மாட்டினாலும் அவ்ளோதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை