உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமித் ஷாவின் கருத்து உண்மையானால் அரசியலில் இருந்து விலகுவாரா ஆதவ்? தமிழக பா.ஜ., சவால்

அமித் ஷாவின் கருத்து உண்மையானால் அரசியலில் இருந்து விலகுவாரா ஆதவ்? தமிழக பா.ஜ., சவால்

சென்னை: 'தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும்போது, அமித் ஷா மற்றும் பா.ஜ.,வின் கருத்து உண்மை என தெரிந்தால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அரசியலை விட்டு விலகுவாரா' என, தமிழக பா.ஜ., சவால் விடுத்துள்ளது. அதன் அறிக்கை: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொய் பரப்புவது, ஆரோக்கியமான அரசியல் இல்லை. தொகுதி மறுவரையறை குறித்து, அவர் தெரிவித்த அனைத்து விஷயங்களும், பொய்யானவை. அனைத்து மாநிலங்களிலும், தற்போதுள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை, 50 சதவீதம் உயர்த்தப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெரிவித்துள்ளார். தமிழகத்தின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை, 39ல் இருந்து 59 ஆக உயரும். இதனால், தமிழகத்தின் பிரதிநிதித்துவம், 7.18 சதவீத்தில் இருந்து 7.23 சதவீதமாக உயரும். தொகுதி மறுவரையறையால், வட மாநிலங்கள் மட்டுமே பயனடைவதாக ஆதவ் சொல்கிறார். பா.ஜ., அரசுக்கு அதுதான் நோக்கம் எனில், உத்தர பிரதேசத்திற்கு 140 தொகுதிகள் கிடைக்கக் கூடிய, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான, தொகுதி மறுவரையறையை நேரடியாக அமல்படுத்தியிருப்பர். ஆனால், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், ஒருங்கிணைந்த அளவில், 50 சதவீதம் உயர்வு என்ற விதிமுறையால், தமிழகத்திற்கு மேலும் 20 எம்.பி.,க்கள் கூடுதலாக கிடைக்க, மத்திய பா.ஜ., அரசு வழிவகுத்துள்ளது. இதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது, காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. தொகுதி மறுவரையறை குறித்து, ஆதவ் அர்ஜுனா சொல்லும் பொய்கள் அனைத்தும், லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நொடியே துாள் துாளாகி விடும். இந்த விவகாரத்தில், பா.ஜ., மற்றும் அமித் ஷா கூறுவது அனைத்தும் உண்மை என நிரூபணமானால், தோல்வியை ஒப்புக் கொண்டு, அரசியலை விட்டே வெளியேறும் திராணி, ஆதவ் அர்ஜுனாவுக்கு இருக்கிறதா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

உண்மை கசக்கும்
ஆக 14, 2026 21:31

புரிகிறது.


Krishna
ஆக 14, 2026 20:17

த வே க காங்கிரஸ் தூண்டுதலால் இந்த தீர்மானத் தை எதிர்க்கிறது. ப ஜ க எல்லா மாநிலங்களிலும் 50 சதவிதம் தொகுதி உயர்த படும் என்று உறுதி அளித்தும் த வே க எதிர்க்கிறது.


பிரேம் குமார்
ஆக 14, 2026 17:49

தொகுதி வரையறை சீரமைப்பு பற்றி முழு அறிவு ஞானம் இல்லாத காங்கிரஸ் கட்சி தவெகவை எப்போதும் தன் கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்ற தீய எண்ணத்தில் தமிழக சட்டமன்றத்தில் அதற்கு எதிராக தீர்மானம் போட வைத்துள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் போதே தொகுதி எண்ணிக்கை அதிகப்படுத்தி ஒவ்வொரு மாநிலத்திலிருக்கும் அதிகப்படியான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கம் இருந்ததை புதிய அரசியல்வாதிகளுக்கு தெரியாவிட்டாலும் சிதம்பரம் போன்றோர் தக்க ஆலோசனை கூறாமல் விட்டது ஒரு பெரிய பிழை. தொகுதிகள் அதிகப் படுத்துவதன் நோக்கம் பாஜக தங்களுக்காக மட்டுமே என்றால் 2024 தேர்தலில் கூட மாற்று வழியை பாஜக ஏற்படுத்தி இருக்கலாம். அப்போது நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த 99 இடங்ளையும் அகிலேஷ் மற்றும் மம்தா கட்சியினர் வெற்றி பெற்ற இடங்களையும் கூட மோடியால் தடுத்திருக்க முடியும். ஜனநாயகத்தின் மீதும் தேர்தல்களின் மீதும் பாஜகவிற்கு உண்மையில் நம்பிக்கை இருப்பதால் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தான் தொகுதி சீரமைப்பு சட்டம் கொண்டுவர பாஜக வால் முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது. தொகுதிகள் அதிகமானால் பிரதிநிதிகள் குறைந்த மக்களோடு தான் தொடர்பு கொள்ளும் நிலை உருவாகும். வளர்ந்த பாரதத்திற்கு இது தான் முக்கிய தேவை. இதைத் தான் பாஜக அரசு செய்ய முன். வருகிறது. இதன் உண்மை தன்மையை முமையாக உணர்ந்தும் மக்களை தவறான வழியில் திசை திருப்பி அரசியலாக்க நினைப்பவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.


Ashok Subramaniam
ஆக 14, 2026 17:22

கரெக்ட்தான்.. ஆனால் கொடுத்தது லஞ்சம்தானே.. ஏன் கொடுத்தாங்க? இரண்டுபேருமே குற்றவாளிதான்... நான் என்னோட மாமனார் மார்ட்டினைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தறேன்... உங்கள் ஆளையும்தான்னுதானே தூ...தூய ஆட்சியாளர் ஆதவ் சொல்லியிருக்கணும்?


Govi
ஆக 14, 2026 16:35

அமித் ஷவுக்கு இவர் எல்லாம் ...


Gokul Krishnan
ஆக 14, 2026 15:33

543 பார்லிமென்ட் உறுப்பினர் இருக்கும் போ தே ஒரு விவாதமும் உருப்படியாக நடை பெறுவது இல்லை 815 வந்து ஒன்றும் கிழிக்க போவது இல்லை 100 சதவீதம் சுத்தமான பெட்ரோல் இறக்குமதி அப்பா வீட்டில் இருந்து வருமா என்று கேட்டார் பிஜேபி எம் பி ஜனார்த்தன மிஸ்ரா இப்போது எம் பி க்கள் அதிகரிப்பதன் மூலம் அவர்களது சம்பளம் பணிக்கொடை பென்சன் இதர செலவுகள் யார் அப்பா வீட்டில் இருந்து வரும் என்பதை ஜனார்த்தன மிஸ்ரா விளக்க வேண்டும்


Vijay D Ratnam
ஆக 14, 2026 14:56

யோவ் இந்த சவுண்ட் உடுற வேலையெல்லாம் வேணாம். லாட்டரி மாபியாவிடம் குடும்பம் 900 கோடி ரூபாய் வாங்கி தின்னதை முகத்துக்கு எதிரா சட்டமன்றத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லிட்டாருல்ல. திருடனுக்கு தேள் கொட்டுனா மாதிரி கம்முன்னு இருந்தாருல்லே ப வாரிசு .


ஆரூர் ரங்
ஆக 14, 2026 12:27

குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை துவக்கத்திலேயே கடுமையாக எதிர்த்தது சிறுபான்மையின மக்களும் கம்யூனிஸ்டு ஆட்களும்தானே? . இப்போ கூட சர்ச் மசூதிகளில் குடும்பக் கட்டுப்பாடு எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தப்படுகிறது. ஹிந்துக்கள் சதவீதம் மட்டும் குறைந்ததுதான் உண்மை.


Narayanan
ஆக 14, 2026 11:04

ஆதவ் அர்ஜுனாவுக்கு லாட்டரியில் கொள்ளை அடிப்பதும் . பலகட்சிகளுக்கு தாவுவதும் கைவந்த கலை. குறை சொல்லியே வெற்றி இலக்கை எல்லா நேரத்திலும் அடையமுடியாது .


spr
ஆக 14, 2026 09:57

தமிழக பாஜக அப்படித்தான் சொல்லும் அவர்கள் அடிமைகள். முதல் வருடம் அமித்ஷா சொன்னது போலத்தான் இருக்கும் ஆனால் அதில் இருக்கும் அடுத்த வரி "தொகுதியில் அடுத்த மறுவரையறை எப்போது நடக்கும் எதனடிப்படையில் நடக்குமென்று உறுதி சொல்லவில்லை அதனைத் தீர்மானிக்கும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்று சொல்கிறது அப்போது மக்கட்த்தொகை காரணமாக தென் மாநிலங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை பாராளுமன்றத்திலும் மாநில சட்ட மன்றத்திலும் குறைய வாய்ப்பிருக்கிறது அதனால்தான் அரசியல் சாணக்கியன் சந்திர பாபு ஆந்திர மக்களை அதிகம் பெற்றுக்கொள்ளச் சொல்கிறார் அரசு நிதி உதவும் என்கிறார். வட மாநிலங்கள் குறிப்பாக அதிக மக்கட்தொகை கொண்ட நாலு மாநிலங்களை மத்தியில் ஆளும் அரசு கவனித்துக் கொண்டால் போதும் தென் மாநில ஆளுமை குறையும் சட்ட மன்றங்களில் தன் மாநில உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தால் ராஜ்ய சபையில் வர்கள் ஆதிக்கம் குறையும் இரு அவைகளும் கூடும் போது மத்தியில் ஆளும் அரசுக்கு அது சாதகமே எந்த சட்ட மசோதாவையும் சட்டமாக்க முடியும் அதிக உறுப்பினர் எண்ணிக்கையால் மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை உயரும் கூட்டணிக்கு கட்சிகளுக்கு லஞ்சம் போல அமைச்சர் பதவி வழங்க முடியும் ஒரே ஒரு ஆறுதல் மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவற்றுக்கு இதன் பலன் கிடைக்கும் இப்போதிருக்கும் சூழலில் பாஜக தவிர வேறெந்தக் கட்சியும் மத்தியில் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை மிக முக்கியமானது வரும் நாளில், பாஜக கேள்வி கேட்க ஆளில்லாத மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதே உண்மை. இவையெல்லாம் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி மற்றும் பத்திரிகை குறிப்புகளைத் தரும் பத்திரிகை தகவல் அலுவலகம் PIB - Press Information Bureau வலைத்தளத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து மத்திய அமைச்சகங்களின் அறிவிப்புகள் மற்றும் செய்திகள் உடனுக்குடன் தமிழில் வெளியிடப்படுகின்றன குறைந்தது ஒரு வருடம் பொறுத்திருந்து பார்த்து அடுத்த தொகுதி மறுவரையறை மேற்கொண்ட பின் ஆதவ் அரசியலில் இருந்து விலக வேண்டுமா என்பதனை தீர்மானிக்கலாம்.


ஆரூர் ரங்
ஆக 14, 2026 12:23

1 இப்போதுள்ள அதே விகிதாசார அடிப்படையில்தான் எல்லா மாநிலங்களுக்கும் ஒன்றரை மடங்கு அதிக இடங்கள் கிடைக்கும். அதனால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பில்லை. எதிர்காலத்தில் இந்தாண்டு சென்சஸ் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்துதான் ஆகவேண்டும். அதனை மேலும் தள்ளிவைக்க முயன்றால் சுப்ரீம் கோர்ட் ஏற்காது. ஏனெனில் மாநிலங்களில் மக்கள் தொகை கூடியதற்கு சென்ற தலைமுறை மக்கள்தான் காரணம். இப்போதுள்ள பின்தங்கிய மாநில தலைமுறை பொறுப்பல்ல என்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை