உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.26,180 கோடி தருமா மத்திய அரசு?

தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.26,180 கோடி தருமா மத்திய அரசு?

சென்னை : சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மற்றும் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில், 26,180 கோடி ரூபாய் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரை, 31.93 கி.மீ., துாரத்திற்கும், கோவையில், 39 கி.மீ., துாரத்தில், அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் உள்ள வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அமைகிறது. மதுரை மெட்ரோ திட்டத்திற்கான, 936 பக்க அறிக்கையும், கோவை மெட்ரோ திட்டத்திற்கான, 655 பக்க அறிக்கையும், கடந்த ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், திட்ட அறிக்கையில் கூடுதல் ஆவணங்கள் இல்லாததை சுட்டிக்காட்டி, கடந்த மத்திய பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது, ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மதுரையில், 11,360 கோடி ரூபாயிலும், கோவையில், 10,740 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கூடுதல் ஆவணங்களை இணைத்து, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 4,080 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதுடன், கடன் வசதி செய்து தருமாறும், மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டில், தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் போது, அடுத்தகட்ட பணிகளை விரைவுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

venugopal s
ஜன 29, 2025 11:21

மக்களுக்கு அத்தியாவசியமான கும்பமேளாவுக்கு செலவு செய்தது போக ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் கொடுத்தாலும் கொடுப்பார்கள்!


முக்கிய வீடியோ