உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மின்வாகனம் இயக்கத்தில் பின்னடைவு; சலுகையை நீட்டிக்குமா தமிழக அரசு?

மின்வாகனம் இயக்கத்தில் பின்னடைவு; சலுகையை நீட்டிக்குமா தமிழக அரசு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் மின்சார வாகனங்கள் இயக்கம், நாட்டின் சராசரியை விட குறைவாக உள்ளது.எனவே, மாநில அரசின் வரி விலக்கு சலுகையை நீட்டிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசின் மின்சார வாகன கொள்கையின்படி, அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும், முதல் முறையாக 2019ம் ஆண்டு நவம்பர் முதல், முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சலுகை, 2023 ஜனவரி முதல் 2025 டிசம்பர் வரை நீட்டித்து வழங்கப்பட்டது. தற்போது, சலுகை முடியும் நிலையில் உள்ளது.தமிழகத்தில், தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனினும், தேசிய சராசரி அளவை விட, தமிழகத்தின் மின்சார வாகனங்கள் இயக்கம் குறைவாக இருக்கிறது.இது குறித்து, 'இந்தியன் சார்ஜ் பாயின்ட் ஆப்பரேட்டர் அசோசியேஷன்' இயக்குநர் கார்த்திகேயன் கூறியதாவது:சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவு குறைப்பு காரணமாக, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனினும், தேசிய அளவிலான சராசரியை விட, சற்று குறைவாக இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் மின்சார வாகனப் பயன்பாட்டு விகிதம் 7.5 சதவீதம். தேசிய அளவில் 8.5 சதவீதம்.மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் மின்சார வாகன பயன்பாட்டு விகிதம், குறைவாக உள்ளது. எனவே, தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மின்சார வாகனங்களுக்கான வரி சலுகையை, மேலும் நீட்டிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அரசிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை