உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., - பா,ஜ., ஆட்டத்தில் த.வெ.க., சிக்குமா; தப்புமா?

அ.தி.மு.க., - பா,ஜ., ஆட்டத்தில் த.வெ.க., சிக்குமா; தப்புமா?

கரூர் துயர சம்பவத்தை மையப்படுத்தி, கூட்டணிக்குள் இழுக்க, அ.தி.மு.க., --- பா.ஜ., நடத்தும் ஆட்டத்தில், த.வெ.க., சிக்குமா அல்லது தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=of4hsg6r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கரூர் சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க., மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நெருக்கடியை பயன்படுத்தி, அக்கட்சியை கூட்டணிக்குள் இழுக்க, அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் காய் நகர்த்தி வருகின்றன.

திணறல்

கரூர் சம்பவத்திற்கு பின் ஒரு வார காலத்துக்கு மேலாக வெளியே தலைகாட்டாமல் இருந்த த.வெ.க., தலைவர் விஜய், சமீபத்தில் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், மொபைல் போனில் பேசி ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்திற்கு பின் கட்சிக்குள்ளும், பொது வெளியிலும் ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் விஜய் திணறி வந்தார். சமீபத்தில், குமாரபாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசிய கூட்டத்தில், த.வெ.க., கொடியுடன், அக்கட்சியினர் பங்கேற்ற செய்தி வெளியானது. ஏற்கனவே விஜயிடம், பழனிசாமி மகன் மிதுன் பேசியுள்ள நிலையில், பழனிசாமியும் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் சந்தித்து பேசிய தகவலும் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில், கரூர் சம்பவ விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, விஜயை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என, பா.ஜ., தரப்பிலும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

பா.ஜ.,வை கொள்கை எதிரி என கடுமையாக விமர்சித்த விஜய், தற் போது அமைதியாக இருக்கி றார். சிவகங்கையில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்ததை எதிர்த்த விஜய், கரூர் சம்பவத்துக்கு மட்டும் சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்றார். அதை வலியுறுத்தி, 'கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு வேண்டாம்; சி.பி.ஐ., விசாரணையே வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தை த.வெ.க., அணுகியிருக்கிறது. இந்த நிலைப்பாட்டை விஜய் எடுப்பதற்கு, பா.ஜ., பின்னணி தான் காரணம்.

ஆட்டம் ஆரம்பம்

தேர்தல் கமிஷனில் நிலுவையில் இருந்த, இரட்டை இலை வழக்கை பயன்படுத்தி, அ.தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது போல, கரூர் விவகாரத்தை சி.பி.ஐ.,க்கு மாற்றி, விஜயையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க, பா.ஜ., திட்டமிட்டு, தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இப்படி அ.தி.மு.க., - பா.ஜ., இரு தரப்பும் விஜயை இழுக்க ஆடும் ஆட்டத்தில், அவர் சிக்குவாரா அல்லது தப்பி விடுவாரா என்பது விரைவில் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
அக் 11, 2025 14:23

இனி காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவுமில்லை என அறிவித்த திமுக இப்போ? ஆக அரசியலில் எதுவும் நடக்கலாம். சொந்த தொண்டர் படை , இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாருமே இல்லாமல் வெறும் ஆதரவாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது . ஏன் அன்றாட அரசியலையே நடத்த முடியாது.. விஜய் இதனை இப்போது புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் டூ லேட்.


naranam
அக் 11, 2025 11:36

விஜய் ரசிகர்கள் ஐந்து வயது முதல் எழுபது வயது வரை இருக்கிறார்கள்.. அதனால் பெரும்பாலான ரசிகர்களால் வாக்களிக்க முடியாது. மீதமுள்ளவர்கள் மற்ற கட்சி ஆதரவாளர்களாக இருந்தவர்களே.. விஜய் அரசியலிலிருந்து விலகினாலும் அல்லது கூட்டணியில் இணைந்தாலும் அதனால் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.


சேகர்
அக் 11, 2025 11:09

அரசியல் சாரா திரை ரசிகர்களில் 25 சதவிகிதம் விஜயை ஆதரித்தால் 75 சதவிகிதம் எதிர்ப்பே. ஆக, விஜயை கூட்டணியில் சேர்த்தால் நஷ்டமே


Oviya Vijay
அக் 11, 2025 09:58

கூட்டத்தில் எந்நாளும் சிங்கம் சிக்கிக் கொள்ளாது...


Haja Kuthubdeen
அக் 11, 2025 09:40

முதலில் விஜயும் கட்சியும் அராஜகக் கட்சியிடம் இருந்து தப்பி பிழைப்பதே முக்கியம்...


முருகன்
அக் 11, 2025 06:36

இவர்களை விஜய் பேசிய பேச்சுக்கு கூட்டணியில் சேர்ந்தால் படுதோல்வி அடைவது உறுதி


முக்கிய வீடியோ