உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரசுடன் இணையுமா?

திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரசுடன் இணையுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி அரசியல் வட்டாரங்களில், இப்போது பரபரப்பாக அலசப்படும் விஷயம், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், காங்கிரசுடன் இணையுமா என்பது தான். மேற்கு வங்க சட்ட ச பை தேர்தலில், மம்தாவின் கட்சி படு தோல்வி அடைந்ததுடன், தன் சொந்த தொகுதி யான பவானிபூரிலும் அவர் தோற்றார்.இதையடுத்து, திரிணமுல் லோக்சபா எம்.பி.,க்கள் 19 பேர், மம்தாவிற்கு எதிராக தனி குழு அமைத்து, பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கட்சியின் மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களும் ராஜினாமா செய்து விட்டனர். இது போதாதென, பல எம்.எல்.ஏ.,க்களும் மம்தாவிற்கும், அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கும் எதிராக திரும்பி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vsuc71kl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுவரை ராகுலை கிண்டல் செய்து வந்த மம்தா, தன் தோல்விக்கு பின், 'இண்டி' கூட்டணி கூட்டத்தில் வலிய சென்று பங்கேற்று, பா.ஜ.,விற்கு எதிராக செயல்பட வேண்டும் என, பேசி உள்ளார். மேலும், காங்., தலைவர் சோனியாவை தனியாக சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளார் மம்தா. அது போல், அபிஷேக் பானர்ஜியும் ராகுலை சந்தித்து, இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தி உள்ளார். 'நீங்கள் ஒரிஜினல் காங்கிரஸ்காரர். எனவே, காங்கிரசுடன் உங்கள் கட்சியை இணைத்துவிடுங்கள்' என சோனியாவும், ராகுலும் ஆலோசனை கூறி உள்ளனர்.ஆனால், 'இணைப்பு குறித்து எந்த பேச்சும் நடக்கவில்லை. இது, ஆதாரமற்ற வதந்தி' என சொல்லியிருக்கிறார் அபிஷேக் பானர்ஜி. ஆனால், 'இணைப்பு குறித்த விஷயம் விவாதிக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் காங்கிரசார். 28 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சி, இப்போது பரிதாப நிலையில் உள்ளதே என, கடும் மன வேதனையில் உள்ளார் மம்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

shanmukchand
ஜூன் 14, 2026 20:01

If TMC merges with congress then Communist will be the principal opposition in west Bengal


ஆரூர் ரங்
ஜூன் 14, 2026 17:12

எலி வளை ஆனாலும் தனி வளைதான் சிறப்பு. ராகுலின் தலைமையை ஏற்பது மனநிலை சரியில்லாத ஆட்களுக்கு மட்டுமே சரி வரும்.


எஸ் எஸ்
ஜூன் 14, 2026 14:26

இணைந்தால் பத்தோடு பதினோன்று அவ்வளவுதான் எந்த மரியாதையும் இருக்காது என்று மம்தாவுக்கு தெரியாதா என்ன?


Prem Kumar
ஜூன் 14, 2026 14:04

0 0= 00


Ramesh Sargam
ஜூன் 14, 2026 12:07

தமிழ் பட காமெடி மாதிரி, அதாவது வரும், ஆனா வராது போல, இணையும், ஆனா இணையாது.


சம்சூ காதர் பேட்டை
ஜூன் 14, 2026 06:12

கழுதை கெட்டால் குட்டி செவுரு