வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இன்னும் அமரிக்கா வட்டி விகிதத்தை பொறுத்தே அந்நிய முதலீடு வளருமாம்.எப்போ டாலரை ஒழிச்சுக் கட்டப்.போறீங்க?
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்காவில் அந்நாட்டு மத்திய வங்கி பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு குறைத்துள்ளது.அமெரிக்காவட்டி விகிதம் தற்போது 4.75 - 5.00%இதற்கு முன் 5.25 - 5.50%பணவீக்கம்ஜூலை 2.90%ஆகஸ்ட் 2.50%இந்தியாவட்டி விகிதம்தற்போது 6.50%இதற்கு முன் 6.25%பணவீக்கம்ஜூலை 3.60% ஆகஸ்ட் 3.65%அமெரிக்காவுக்கு என்ன?* வீடு வாகன தொழில் வட்டி குறையும்*செலவழிப்பும் முதலீடும் அதிகரிக்கும்* வட்டி வருவாய் குறையும்இந்தியாவுக்கு என்ன?*அன்னிய முதலீடு அதிகரிக்கும்* பங்கு சந்தை வளரும்* ரூபாய் மதிப்பு அதிகரிக்கும்அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன் வட்டியை 0.50 சதவீதம் குறைத்திருப்பது, இந்தியாவில் மிகக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தக்கூடும். நம்நாட்டின் சந்தைகள் ஏற்கனவே உள்புற வலிமையான கட்டமைப்புடன் செயல்படுகின்றன. அமெரிக்க வட்டி குறைப்பு, நிச்சயமாக உலக பொருளாதாரத்தில் சாதகமான சூழலையே ஏற்படுத்தும்.-- அனந்த நாகேஸ்வரன், தலைமை பொருளாதார ஆலோசகர்ஆர்.பி.ஐ., வட்டியை குறைக்குமா?அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவு, இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கையில் தாக்கம் ஏற்படுத்தியது கடந்த கால வரலாறு. ஆனால், தற்போது வெளிநாடுகளின் நடவடிக்கைகளை பின்பற்றும் அழுத்தம் ஏதும் இந்தியாவுக்கு இல்லை என்றும்; பணவீக்கம் குறைந்த அளவில் நீடிக்கும் வரை, வட்டி குறைப்பில் அவசரம் காட்ட முடியாது என்றும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறி வருகிறார். எனவே, உள்நாட்டு பொருளாதார நிலவரங்களைப் பொறுத்து, வட்டி குறைப்பு உடனடியாக இருக்க வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இன்னும் அமரிக்கா வட்டி விகிதத்தை பொறுத்தே அந்நிய முதலீடு வளருமாம்.எப்போ டாலரை ஒழிச்சுக் கட்டப்.போறீங்க?