உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சாவர்க்கரை நீங்களே கிண்டல் செய்கிறீர்களே: ராகுல்

சாவர்க்கரை நீங்களே கிண்டல் செய்கிறீர்களே: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டு விழா சிறப்பு விவாதத்தில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது:அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி சாவர்க்கர் என்ன கூறியிருந்தார் தெரியுமா. 'அரசியலமைப்பு சட்டத்தில், இந்தியர்கள் குறித்து எதுவும் கிடையாது. நம் தேசத்தில், வேதங்களுக்கு பின், மிகவும் மதிப்பு வாய்ந்தது எதுவெனில், மனுஸ்மிருதி மட்டுமே. 'நம் கலாசாரம், பழக்க வழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறையை இது பிரதிபலிக்கிறது. மனுஸ்மிருதியானது, பல நுாற்றாண்டுகளாக நம் தேசத்தின் ஆன்மிக மற்றும் தெய்வீகப் பயணத்தின் குறியீடாக இருக்கிறது' என்று தான் கூறியிருக்கிறார்.எழுத்துப்பூர்வமாகவே, 'அரசியலமைப்பு சட்டத்தில் எதுவுமே இல்லை. இந்த அரசியலமைப்பு சட்டப் புத்தகத்திற்கு பதிலாக மனுஸ்மிருதி புத்தகம் தான் இருக்க வேண்டும்' என்றும் சாவர்க்கர் கூறினார். தற்போது நடக்கும் போராட்டமே, இந்த இரண்டு புத்தகங்களுக்கும் இடையில் தான். இப்போது என் கேள்வி என்னவென்றால், சாவர்க்கரை கொள்கை தலைவராக கொண்டுள்ள நீங்களும், 'அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்' என்று பேசுகிறீர்கள். அப்படி என்றால், நீங்கள் உங்கள் தலைவர் சாவர்க்கரை கேலி செய்கிறீர்களா; கிண்டல் செய்கிறீர்களா? அவரது எழுத்தை நீங்கள் அவமானப்படுத்துகிறீர்களா என்பதை தெரிவிக்க வேண்டும். குருதட்சணையாக கட்டை விரலை ஏகலைவனிடம் துரோணாச்சாரியார் கேட்ட கதை அறிவோம். அதுபோல, இந்த ஒட்டுமொத்த நாட்டின் கட்டை விரலை வெட்டுவதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது இந்த அரசு. மும்பையில் உள்ள தாராவியை அதானியிடம் கொடுத்ததன் வாயிலாக, தொழில் முனைவோர் சிறு தொழில் செய்வோரின் கட்டை விரலை வெட்டி விட்டீர்கள். ஏகலைவனைப் போல, தேர்வுகளுக்கு இந்த நாட்டின் மாணவர்கள் மிகுந்த பயிற்சி எடுத்து தயாராகின்றனர். முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்து பயிற்சி செய்து பின் ஓடுவர். அக்னிவீர் திட்டம் அறிவிக்கப்பட்டதும், அவர்களது கட்டை விரலும் வெட்டப்பட்டது.ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பொதுச் சமூகத்தில் தீவிர கோரிக்கை இருந்தபோதிலும், அதை நடத்துவதற்கு மத்திய அரசு தயங்குவது ஏன் என தெரியவில்லை. புதிய திறன் படைக்கும் இந்தியாவை உருவாக்கும் வகையில், நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை எங்கள் கூட்டணி நடத்தி, இட ஒதுக்கீடு உச்ச வரம்பான 50 சதவீதத்தை உடைப்போம்.இவ்வாறு அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Anonymous
டிச 15, 2024 18:13

என்ன சொல்ல வராரு புரியலை, சாவர்க்கரை மதிக்கிறோம் , அதனால் இன் இந்திய அரசியல் அமைப்பு மனுஸ்மருதி படி நடக்கும் என்று அரசு சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாரா? இல்லை அப்படி அவர்களை சொல்ல தூண்டி விட்டு , அதன் மூலம் அய்யோ , ஹிந்துத்வாவை நாட்டின்.மக்கள் மீது திணிக்கிறார்களே என்று கூப்பாடு போட்டு , கும்மியடிக்க இவரும் இவர் கட்சியும் திட்டம் போட்டு , வேலை செய்கிறார்களா? முன்னுக்கு பின் முரணாக பேசி , ஏன் இந்திய மக்களை இப்படி சாவடிக்கிறார்?


எவர்கிங்
டிச 15, 2024 14:39

தவறானது


Nandakumar Naidu.
டிச 15, 2024 11:43

போட்டோவை போடாதீங்கய்யா.


hariharan
டிச 15, 2024 11:26

மகாத்மா காந்தி, நாடு சுதந்திரம் அடைந்தபிறகு காங்கிரசை கலைத்து விடலாம் என்று கூறினார். நாம் எதற்காக காங்கிரஸை தொடங்கினோமோ அந்த குறிக்கோள் நிரைவடைந்து விட்டது என்றார். ஆனால் அந்த யோசளையை புறந்தள்ளியவர் இவருடைய கொள்ளுத்தாத்தா. இவர் சொல்வதுபோல வைத்துக்கொண்டால் இவர்களும் காந்தி (மகாத்மா) சொன்னபடி நடக்கவில்லை என்று சொல்லலாமா? பெயருக்கு, தேவைப்படும்பொழுது அவரை மேற்கோள் காட்டுகின்றனர். இதற்கு காங்கிரஸ் விளக்கம் சொல்லுமா? சவார்க்காரை இந்த அளவு கேவலமாக சித்தரிப்பதில் மகாராஷ்ட்ராவில் காங்கிரஸின் கூட்டணி கட்சிகளின் விளக்கம் என்ன?


ஆரூர் ரங்
டிச 15, 2024 10:18

ஒருமுறை மிஸோரம் சட்டசபை காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் பைபிள் வழியில் ஆட்சி நடத்துவோம் என வாக்குறுதியளித்தது. (அது ஸோரோஸ் காட்டும் வழி ?). அது மதச்சார்பின்மையா? பூணூல் அணிந்த கவுல் பிராமணர்ன்னு சொல்லிக்கொள்ளும் இவரு மனுஸ்மிருதியைக் குறை கூறலாமா?


ஆரூர் ரங்
டிச 15, 2024 09:22

மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த நபர் மாணவர் காங்கிரஸ் தலைவன். இப்போ 50 சதவீத உச்சவரம்பை உடைப்பாராம். உங்க பேச்சு புளிச்சுப் போச்சு.


ராமகிருஷ்ணன்
டிச 15, 2024 08:59

ராவுலு குரான் மட்டுமே படிக்கும் ..இந்துக்களின் புனித புத்தகங்களை படிக்க மாட்டாய். எவனோ எழுதி கொடுப்பதை மனப்பாடம் செய்து வந்து படிக்கிறாய். நம்ம துண்டுசீட்டுக்கு அது கூட முடியவில்லை.


பேசும் தமிழன்
டிச 15, 2024 08:52

பிஜேபி கட்சியை கலாய்த்து விட்டாராம்..... அப்படி தான் பப்பு நினைத்து கொண்டு இருக்கிறார்.... ஆனால் இவரது விமர்சனம் மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் இந்தி கூட்டணியை இல்லாமல் செய்ய போகிறது.


பேசும் தமிழன்
டிச 15, 2024 07:42

ராஜா வீட்டு கன்றுக்குட்டி.. தான் கூறுவதை தான் நாட்டு மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்.. கொள்ளு தாத்தா.. பாட்டி.. அப்பா.. வரிசையில்.... தனக்கும் பிரதமர் பதவி எளிதாக கிடைத்து விடும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால் நாட்டு மக்கள் அதற்குள் விழித்து கொண்டு விட்டார்கள்.. பதவி கிடைக்காத வெறியில்.... தனக்கு ஓட்டு போடாத மக்களின் மீது கொண்டுள்ள கோபத்தை காட்ட .... இப்படி உளறி கொண்டு இருக்கிறார்.


பேசும் தமிழன்
டிச 15, 2024 07:36

ஜாதி வாரி... ஜாதி வாரி கணக்கெடுப்பு என்று கூவி கொண்டு இருக்கிறாயே பப்பு..... மத வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி எப்போதாவது கேட்டது உண்டா... இந்துக்களை ஜாதி வாரியாக பிரித்து குளிர் காய பார்க்கிறார்கள் இந்தி கூட்டணி ஆட்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை