உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை இலவசமாக வழங்க என்.ஆர். காங்., வலியுறுத்தல்

காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை இலவசமாக வழங்க என்.ஆர். காங்., வலியுறுத்தல்

புதுச்சேரி : காமராஜர் பிறந்த நாளில் அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் பாலன் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:காமராஜரின் 109வது பிறந்த நாள் நாளை (15ம் தேதி) என்.ஆர்.காங்., சார்பில், எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்படுகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்துகிறார்கள்.காமராஜரின் பிறந்த நாளையொட்டி அனைத்து தொகுதிகளிலும் அவரின் உருவப்படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, இனிப்புகளும், அன்னதானங்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும் அவரின் நினைவாக அந்தந்த தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு என்.ஆர்., காங்., சார்பில் பரிசுகள் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகங்களையும் இலவசமாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ