| ADDED : செப் 06, 2011 01:01 AM
புதுச்சேரி: சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில் இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்புகள் நாளை (7ம் தேதி) துவங்குகிறது.
அமைப்பின் பொறுப்பாளர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சமஸ்கிருத பாரதி தன்னார்வ அமைப்பு மூலம் சமஸ்கிருதம் பேச, படிக்க, எழுத இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது. 13 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் பயிற்சி பெறலாம். பயிற்சி வகுப்புகள் நாளை (7ம் தேதி) முதல் 16ம் தேதி வரை பத்து நாட்கள் நடக்கிறது. காந்தி வீதியில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.மேலும் விபரங்களுக்கு 2229494 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.