உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்களை கேலி செய்த இரண்டு பேர் கைது

பெண்களை கேலி செய்த இரண்டு பேர் கைது

புதுச்சேரி: பெண்களை கேலி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். பெரியகடை சப் இன்ஸ்பெக்டர் ரகுபதி நேற்று முன்தினம் பிற்பகல் பாரதி பூங்கா அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வில்லியனூர் புதுநகரை சேர்ந்த சிவபெருமாள், 22, என்பவர் பூங்காவிற்கு வரும் பெண்களை கேலி செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். அதேபோல் தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, பூரணாங்குப்பம் பஸ் நிறுத்தப் பகுதியில் நேற்று முன்தினம் காலை ரோந்தில் இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன், 21 என்பவர் பெண்களை கேலி செய்து கொண்டிருந்த போது பிடிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை