உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு வில்லியனூரில் பயிற்சி முகாம்

கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு வில்லியனூரில் பயிற்சி முகாம்

வில்லியனூர் : கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் வில்லியனூரில் நேற்று நடந்தது. வில்லியனூர் வட்டாச்சியர் அலுவலகம் சார்பில் வில்லியனூர் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கு உட்பட்ட பகுதியில் சமூக பொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பு செய்ய உள்ள களப் பணியாளர்களுக்குப் பயிற்சி வகுப்பு ஆச்சார்யா பள்ளி கருத்தரங்க வளாகத்தில் நடந்தது. பயிற்சி முகாமிற்கு தாசில்தார் யஷ்வந்தையா தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் கார்த்திகேயன், வினாயகம், சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளர் அய்யனார் உள்ளிட்டவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். வரும் 18ம் தேதி முதல் நடக்க உள்ள கணக்கெடுப்பில் மக்கள் சரியான தகவல்களைக் கொடுத்து ஒத்துழைக்க வேண்டும் தாசில்தார் யஷ்வந்தையா கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்