உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சரோன் சொசைட்டியில் முதியோர் தின விழா

சரோன் சொசைட்டியில் முதியோர் தின விழா

புதுச்சேரி : சரோன் சொசைட்டி சார்பில் உலக முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மனமகிழ் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைப்பு செயலாளர் மோகன் வரவேற்றார். குறிஞ்சி நகர் நலவாழ்வு சங்கத் தலைவர் ராஜசெல்வம் தலைமை தாங்கினார். மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத் தலைவர் அய்யர் முன்னிலை வகித்தார். புலவர் பட்டாபிராமன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் இந்திய கடலோர காவல்படை கமாண்டர் சுரேஷ் மங்கோட்டி, சத்யா சிறப்பு பள்ளி இயக்குனர் சித்ரா ஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர். விநாயகா மிஷன் கல்லூரி முதல்வர் முத்தமிழ்ச்செல்வி, அரசு மருத்துவமனை டாக்டர் தமிழரசி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். சுகுணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை