உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மா.கம்யூ., சார்பில் தண்டோரா போராட்டம்

மா.கம்யூ., சார்பில் தண்டோரா போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் தண்டோரா முழக்கப் போராட்டம் நடந்தது. காந்தி வீதி - ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் நடந்த போராட்டத்திற்கு நகர மா.கம்யூ., செயலா ளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் முருகன், செயலாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ராஜாங்கம், நிலவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அசன் அலி போலி பாஸ்போர்ட் பெற்ற விவகாரத்தில் கவர்னர் இக்பால் சிங்கிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது, விதிமுறைகளை மீறி விண்ணப்பித்த மூன்று நாட்களில் தனது குடும்ப உறுப்பினருக்கு காரைக்காலில் மருத்துவக் கல்லூரி துவக்க அனுமதி அளித்தது போன்றவற்றை தண்டோரா மூலம் மா. கம்யூ.,வினர் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை