உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலகத் தமிழ்க்கழகத்தின் சிறப்பு உரையரங்கம்

உலகத் தமிழ்க்கழகத்தின் சிறப்பு உரையரங்கம்

புதுச்சேரி: உலகத் தமிழ்க் கழகம் புதுச்சேரி கிளை சார்பில் லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மனமகிழ் மன்றத்தில் சிறப்பு உரையரங்க நிகழ்ச்சி நடந்தது. உலகத் தமிழ்க் கழக செயலாளர் தமிழ்மாறன் வரவேற்றார். அமைப்பாளர் தமிழுலகன் தலைமை தாங்கினார். முனைவர் அரணமுறுவல் 'சமச்சீர் கல்வியைத் தமிழ்வழியாக்குக' என்ற தலைப்பிலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் அருளி 'தூக்கு தண்டனையை முற்றிலும் விலக்குக' என்ற தலைப்பிலும் பேசினர். இதனையடுத்து இந்திய இலக்கியக் கழகப் பரிசு பெற்ற 'சோளக்கொல்லைபொம்மை' நூல் திறனாய்வை நல்ல வில்லியனார் வழங்கினார். திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இளங்குமரன் தமிழ்ப்பாவலர் தங்கப்பா குறித்து பாராட்டுரை வழங்கினார். இல. தங்கப்பா ஏற்புரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை