தேக்வோண்டோ போட்டி புதுச்சேரிக்கு வெண்கலம்
புதுச்சேரி, : தேசிய அளவிலான தேக்வோண்டோ போட்டியில் பதக்கம் வென்ற புதுச்சேரி வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தேசிய அளவிலான தேக்வோண்டோ போட்டி உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் மனீஷ், மோனோஜித் ஆகியோர் வெண்கல பதக்கம் பதக்கம் வென்று சாதித்தனர். இவர்கள் பயிற்சியாளர் வினோத் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.,பாஸ்கரிடம் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.சங்க உறுப்பினர்கள் ஜான், ஷாலினி, காமேஸ்வரன், பயிற்சியாளர் பிரவீன் உடனிருந்தனர். ஏற்பாட்டினை வசந் செய்திருந்தார்.