உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

அரியாங்குப்பம் : ஆண்டியார் பாளையம் எல்லையம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் பகுதியில் எல்லையம்மன் கோவிலில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இவ்விழாவையொட்டி கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, நடந்தது. அதனை தொடர்ந்து, கடந்த 6ம் வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலச ஸ்தாபனம், முதற்கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து, 6:45 மணிக்கு யாத்திரா தானம், கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 7:45 மணிக்கு பரிவார விமானம், மூலவர் விமானம், ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அருகில் உள்ள மூலவர் முத்துமாரியம்மன் கோவிலில் 8:10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது.விழாவில், சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பிரமுகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை