உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 ஓவர் கிரிக்கெட் போட்டி: ஸ்மாஷ்ர்ஸ் அணி சாம்பியன்

10 ஓவர் கிரிக்கெட் போட்டி: ஸ்மாஷ்ர்ஸ் அணி சாம்பியன்

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த, 10 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் இறுதி போட்டியில், ஸ்மாஷ்ர்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் இணைந்து நடத்திய, 8 அணிகள் பங்கு பெற்ற ஆண்கள், 10 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டி, சி.ஏ.பி., மைதானத்தில், கடந்த ஜூன் 13ம் தேதி துவங்கியது. போட்டியை, சி.ஏ.பி., நிறுவனத்தலைவர் தாமோதரன் துவக்கி வைத்தார்.நேற்று காலை நடந்த இறுதி போட்டியில் ஸ்மாஷ்ர்ஸ் அணி மற்றும் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஸ்மாஷ்ர்ஸ் அணி, 10 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய, டைட்டன்ஸ் அணி, 10 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் மட்டுமே அடித்து, தோல்வியை தழுவியது.ஸ்மாஷ்ர்ஸ் அணி, 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஸ்மாஷ்ர்ஸ் அணி வீச்சசித்தாக் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். பரிசளிப்பு விழாவில், சி.ஏ.பி., கவுரவ செயலாளர் ராமதாஸ், ஸ்மாஷ்ர்ஸ் அணிக்கு கோப்பையை வழங்கினார். இரண்டாம் பரிசை டைட்டன்ஸ் அணிக்கு, முன்னாள் செயலாளர் சந்திரன் வழங்கினார். தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருது ஸ்மாஷ்ர்ஸ் அணி - ராகவன்; சிறந்த பவுலர் டைட்டன்ஸ் அணி - ராஜாராம்; சிறந்த ஆல் ரவுண்டர் விருது பேட்ரியாட்ஸ் அணி - ஆயுத் ஷர்மா, தொடர் நாயகன் விருது அவென்ஜ்ர்ஸ் அணி - அஜய் ரோஹீரா; சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் விருது ஈகிள்ஸ் அணி - விஷ்ணு; ஆகியோருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சைஜூ டிட்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து, ஆண்களுக்கான, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை, 5ம் தேதி, சி.ஏ.பி., மைதானத்தில், துவங்குிறது. இந்த போட்டிகள், பேன்கோடு ஆப்பில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை