உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 பேரிடம் ரூ. 11 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

10 பேரிடம் ரூ. 11 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

புதுச்சேரி: பகுதிநேர வேலையாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என, கூறியதை நம்பி புதுச்சேரி, காரைக்கால் சேர்ந்த பெண் உட்பட இருவர் 6.65 லட்சம் பணத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.திருபுவனையை சேர்ந்த காமாட்சி என்பவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட நபர் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பி காமாட்சி அந்த நபர் கூறியபடி, 3 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலுத்தி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்தார்.அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், காரைக்காலை சேர்ந்த திருகுமரன், 3 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் முதலீடு செய்து ஏமாந்தார். உழவர்கரை அன்பரசு 1 லட்சத்து 35 ஆயிரம், லாஸ்பேட்டை தினகரன், 89 ஆயிரம் 800, கரையாம்புத்துார் சூர்யா 19 ஆயிரம், கருவடிக்குப்பம் ராஜாராம் 3 ஆயிரத்து 850, மரபாலம் மேஷாக் 44 ஆயிரத்து 800, குயவர்பாயைம் சங்கர் 46 ஆயிரத்து 116, தட்டாஞ்சாவடி தென்னரசு 63 ஆயிரம், புதுச்சேரி ராஜா 5 ஆயிரத்து 600, காரைக்கால் நாகர்ஜூன் 23 ஆயிரத்து 500 என, மொத்தம் 11 பேர் மோசடி கும்பலிடம் 10 லட்சத்து 95 ஆயிரத்து 550 ரூபாய் ஏமாந்தனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை