மேலும் செய்திகள்
8-ம் வகுப்பு தனித்தேர்வருக்கு நாளை ஹால் டிக்கெட்
11-Aug-2024
புதுச்சேரி: பத்தாம் வகுப்பு நேரடியாக எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம் என, பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:2024-25ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள், ஏற்கனவே 2012க்கு முன், பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் பதிவு செய்யலாம்.வரும் 20ம் தேதி வரை அறிவியல் பாட செய்முறை சேவை மையங்களுக்கு சென்று இதற்காக பதிவு செய்ய வேண்டும். ஆண் தனித் தேர்வர்கள் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளியிலும், பெண் தனித்தேர்வர்கள் புதுச்சேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்ப படிவம் www.dtge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் 20ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து தனித் தேர்வர்கள் சேவை மையத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.சேவை மையங்களுக்கு சென்று செய்முறை தேர்விற்கு பதிவு செய்வதற்கான ஒப்புகை சீட்டு, முன் தேர்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை இணைந்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்த ஹால்டிக்கெட்டினை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள், அந்த மையத்தில் அறிவிக்கப்படும் நாட்களில் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2024-25 ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள் பின்னர் நடத்தப்படும் செய்முறை தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
11-Aug-2024