உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாசிமக தீர்த்தவாரியில் 11 சவரன் செயின் திருட்டு

மாசிமக தீர்த்தவாரியில் 11 சவரன் செயின் திருட்டு

புதுச்சேரி: புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரியில் 3 மூதாட்டிகளிடம் 11 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.வைத்திக்குப்பம் கடற்கரையில் நேற்று நடந்த மாசிமக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட சில திருட்டு கும்பல் மூன்று மூதாட்டிகளிடம் இருந்து 11 சவரன் செயினை அறுத்து சென்றனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி