உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 பேரிடம் ரூ. 72 ஆயிரம் மோசடி 

2 பேரிடம் ரூ. 72 ஆயிரம் மோசடி 

புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 2 பேர் ரூ. 72 ஆயிரம் இழந்துள்ளனர்.  முத்தியால்பேட்டையை சேர்ந்தவர், மொபைல் வாட்ஸ் எண்ணிற்கு, அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வங்கி கணக்கு அப்டெட் தொடர்பான மொபைல் செயலி வந்துள்ளது. அதை உண்மை என நம்பி, அதனை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டுள்ளார். அதன் பின், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50  ஆயிரத்தை  மர்ம நபர்கள் எடுத்து ஏமாற்றி உள்ளனர்.  இதேபோல், பாகூரை சேர்ந்தவரிடம் 22 ஆயிரம் ரூபாய் என  2 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 72 ஆயிரம் இழந்துள்ளனர்.  புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !