உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘குட்கா’ பறிமுதல் 3 பேர் கைது

‘குட்கா’ பறிமுதல் 3 பேர் கைது

பாகூர்: சோரியாங்குப்பத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளர்கள் மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். பாகூர் பகுதியில் பெட்டி கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகூர் போலீசார் சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, ஹான்ஸ், கூல்லீப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று கடைகளில் இருந்து 5,750 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களான ரத்தினவேல், 47; முல்லைவேந்தன், 30; விக்னேஷ், 27, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை