| ADDED : ஜூலை 06, 2024 04:32 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ. 3.42 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர். கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலகுமரன். இவரை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி, அதறகு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்றார். அதை நம்பி பாலகுமரன் விண்ணப்பத்துடன், செயலாக்க கட்டணம் ரூ.1.06 லட்சத்தை பல்வேறு தவனைகளில் வங்கி கணக்கு மூலம் அனுப்பினார். அதன் பிறகு மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.முத்தியால்பேட்டை மகேஷ் என்பவரை போனில் தொடர்பு கொண்ட நபர், வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.75 ஆயிரம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.திலாசுப்பேட்டையை சேர்ந்த பால்ராஜ் வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம், புதுச்சேரி காந்தி நகர் மலர்விழி வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் மர்ம கும்பல் மோசடி செய்துள்ளது.பூமியான்பேட்டை அஞ்சலிதேவியிடம். குறைந்த விலையில் மொபைல் போன் கிடைக்கும் எனக் கூறி அவரிடம் ரூ. 19 ஆயிரமும், எல்லைப்பிள்ளைச்சாவடி சூர்யாவிடம் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி ரூ.15 ஆயிரம், கவிக்குயில் நகர் சுரேஷிடம், பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.72 ஆயிரம் பெற்று மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.