புதுச்சேரி, : புதுச்சேரியில் இருந்து, சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, 36 பஸ்கள் இயக்கப்படுகின்றன.புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக, 38 பஸ்கள் வாங்கப்பட்டன. இதில், 36 பஸ்கள் வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. இன்னும், இரு பஸ்கள் மட்டும், வர உள்ளது. இந்த இரு பஸ்களில் ஒன்று, திருப்பதி வழித்தடத்திலும் மற்றொன்று, காரைக்கால் - சென்னை வழித்தடத்திலும் இன்னும் ஒரு வாரத்தில் இயக்கப்பட உள்ளது. புதுச்சேரி - சென்னை பஸ்கள்
புதுச்சேரி - சென்னை இ.சி.ஆர். வழியாக செல்லும் பஸ்களுக்கு அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்யலாம். முன்பதிவுடன் கட்டணம் ரூ.173. அதிகாலை 4:00 மணி முதல் தொடர்ந்து, 20 நிமிட இடைவேளையில், அடுத்தடுத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த வழித்தடத்தில், சென்னை செல்ல, ஏ.சி., பஸ் கட்டணம் ரூ.263. புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, திண்டிவனம் வழியாக, காலை 5:40 மணி மற்றும் 6:00 மணிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ.148. மதியம், புதுச்சேரியில் இருந்து, சென்னைக்கு செல்லும் பஸ்கள், காலை 11:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரை, 13 பஸ்களும், மாலை 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, 13 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களுக்கு முன்பதிவு கிடையாது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள்
புதுச்சேரி - பெங்களூரு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள், காலை 10:15 மணிக்கும், இரவு 11:00 மணிக்கும் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு, மதியம் 12:30 மணிக்கும், இரவு 9:30 மணிக்கும் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ.455.புதுச்சேரியில் இருந்து, கோழிக்கோடு மற்றும் மாகிக்கு, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள், மாலை 5:30 மணிக்கு நாகர்கோவிலுக்கு, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள், மாலை 6:25 மணிக்கும் புறப்படுகின்றன. முன்பதிவு
புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு, காலை 8:50, இரவு 9:30 மற்றும் 10:00 மணிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர புதுச்சேரியில் இருந்து, காரைக்கால், வேளாங்கண்ணி மற்றும் காரைக்காலில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்துாருக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், புதுச்சேரி, காரைக்கால் பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையம் மற்றும் www.prtc.inஎன்ற வலைதளத்திலும், பஸ் இண்டியா ஆப் வழியாகவும், முன்பதிவு செய்து கொள்ளலாம்.