உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டலில் சாப்பிட்ட 4 பேர் மயக்கம்

ஓட்டலில் சாப்பிட்ட 4 பேர் மயக்கம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஓட்டலில் டிபன் சாப்பிட்ட நான்கு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆழ்வார் மகன் ஹரிகுமார், 25; இவரது அக்கா கலைச்செல்வி, 27; இவரது மகள்கள் ரியாதி, 8; தன்யா ஸ்ரீ, 6; ஆகிய நான்கு பேரும் நேற்று காலை 8:00 மணியளவில் கொத்தனுாரில் இருந்து மடப்பட்டு நோக்கிச் சென்றனர்.வழியில் ஆணைவாரி மேம்பாலம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் டிபன் சாப்பிட்டனர். சாப்பிட்ட சில நிமிடங்களில் நான்கு பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.அதிர்ச்சியடைந்த ஹரிகுமார் ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது முறையாக பதில் கூறாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஹரிகுமார் தாக்கப்பட்டார்.உடன், அங்கிருந்தவர்கள் 4 பேரையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஹரிகுமாரிடம் ஓட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி