மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
12 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
12 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
12 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
12 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 79 ஆயிரம் மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்த பத்மதிலகம் என்பவர், மொபைல் போனில் லோன் ஆப் மூலம் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தினார். அதனை தொடர்ந்து, அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, மர்ம நபர் மிரட்டினார். அதற்கு பயந்து, அவர் 34 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.நஸ்ரின்பானு என்பவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினர். அதை நம்பி, அவர், 37 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமார்ந்தார்.ராஜேஸ்வரி என்பவர் ேஷர் சாட்டில், ஒரு லிங்கை கிளிக் செய்தார். அதில் இருந்து யூ.பி.ஐ.,விபரங்களை பதிவு செய்தார். சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, ரூ. 5 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. அதே போல், ரவி என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 4 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் எடுத்தார்.இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago