உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது

புதுச்சேரி: ரெயின்போ நகர் மற்றும் கோரிமேட்டில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி ரெயின்போ நகர், 45 அடி சாலையில், சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த சாரம், வேலன் நகர், குளஞ்சிநாதன் மகன் ராமச்சந்திரன், 22; சாரம் வெங்கடேஸ்வரா நகர், பாலன் நகர் சிவக்குமார் மகன் செல்வக்குமார், 27, ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இருவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் கோரிமேடு, குண்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற சாரம், வெண்ணிலா நகர், நடுத்தெருவைச் சேர்ந்த காமராஜன் மகன் சத்தியமூர்த்தி, 23; விழுப்புரம் முருகன், 47; கடலுார் தீனதயாளன், 30, ஆகியோரை சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை