உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை 8 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 8 பேர் கைது

 அரியாங்குப்பம்: பொது இடத்தில் அவதுாறாக பேசி ரகளையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் புறவழிச்சாலை அருகில் பொது இடத்தில் அவதுாறாக பேசுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு நின்ற  நோணாங்குப்பத்தை சேர்ந்த சஞ்சய், 22;  தமிழக பகுதி வத்தலகுண்டு காந்தி நகரை சேர்ந்த ராஜ்குமார், 22; அதே போன்று வீராம்பட்டினம் பகுதியில் ரகளை செய்த வீராம்பட்டினத்தை சேர்ந்த ஜெயந்தன், 45; பரசுராம், 43; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  மேலும் தவளக்குப்பம்  சந்திப்பில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் அடுத்த புத்துப்பட்டை சேர்ந்த கவிபாரதி, 25; பூரணாங்குப்பம் சந்திப்பில் ரகளை ஈடுபட்ட  புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த பரத்ராகுல், 22; அபிேஷகப்பாக்கம் சாலையில் ரகளை செய்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த மதிவேல், 29;  சத்தியராஜ், 33; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ