உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாட்டின் மீது ஸ்கூட்டி மோதி சிறுவன் பலி வாகனம் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

மாட்டின் மீது ஸ்கூட்டி மோதி சிறுவன் பலி வாகனம் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

காரைக்கால்: சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதியதில் ஸ்கூட்டி சென்ற சிறுவன் இறந்தார். காரைக்கால் கோட்டுச்சேரி அக்கம்பேட்டை சுனாமி நகரை சேர்ந்த ரங்கராணி மகன் அகிலன், 15; அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் கோட்டுச்சேரியில் டியூசன் படிக்க தாயின் ரங்கராணி உறவினர் மகன் அபிநத்தனுடன் சென்றுள்ளார்.பின் வீட்டிற்கு ரங்கராணி திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துக்கல்லுாரி மருத்துவமவனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் அகிலன் இறந்தார். அபிநந்தன் சிகிச்சை யில் உள்ளார். புகாரின் பேரில் நகர போக்குவரத்து போலீசார் மாட்டின் உரிமையாளர் மற்றும் 18 வயது மகன் அகிலனிடம் வாகனத்தை ஓட்ட அனுமதித்த இறந்தவரின் தாய் ரங்கராணி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை