உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ சக்கரத்தின் நட்டுகளை கழற்றி விடும் கஞ்சா கும்பல்

ஆட்டோ சக்கரத்தின் நட்டுகளை கழற்றி விடும் கஞ்சா கும்பல்

பெரிய காலாப்பாட்டு இ.சி.ஆரில், சமீபத்தில், ஆட்டோ டிரைவர் ஒருவர், பயணிகள் இல்லாமல் ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.திடீரென ஆட்டோவின் மூன்று சக்கரமும் கழன்று நாலாபுறமும் ஓடி, ஆட்டோவும் விழுந்தது. எதிரில் வாகனங்கள் வராததால் அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். ஆட்டோவின் மூன்று சக்கரத்தின் நட்டுகள் அனைத்து எப்படி ஒரே நேரத்தில் கழன்று ஓடும். அதற்கு வாய்ப்பே இல்லை என, ஆட்டோ டிரைவர்கள் மரண பீதியில் உள்ளனர்.பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் சாதாரணமாக கஞ்சா புழங்குகிறது. இரவில் புதுச்சேரியில் பைக்கில் வரும் வாலிபர், உள்ளூர் வாலிபர்களுக்கு கஞ்சாவை கைமாறிவிட்டு செல்கின்றனர். இந்த தகவல் ஆட்டோ டிரைவர்களுக்கு தெரிய வர போலீசில் புகார் தெரிவித்தனர்.இதில் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் ஆட்டோ சக்கரத்தின் நட்டுகளை கழற்றிவிட்டு, பெரிய விபத்தில் சிக்க வைத்து கொலை செய்ய திட்டமிட்டு இருக்கலாம் என, போலீசாரின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். காலாப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், ஆட்டோவை எடுக்கும் டிரைவர்கள் நட்டுகள் கழன்றுள்ளதா என்று சோதித்த பிறகே ஓட்டிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை