மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
6 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
6 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
6 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
6 hour(s) ago
பாகூர்: இருளஞ்சந்தை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். குருவிநத்தம், வாழப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் 42; என்பதும் அவர், சாராயம் பதுக்கி விற்றதும் தெரியவந்தது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 100 மில்லி அளவுள்ள 95 சாராய பாக்கெட்டுகள், (9.5 லிட்டர்) ரூபாயை பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர். இதேபோல், கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு உச்சிமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்ட நபர் ஒருவர் அவர் வைத்திருந்த சாக்கு பையை போட்டு விட்டு பைக்கில் தப்பி சென்றார்.அந்தப் பையை சோதனை செய்த போது அதில் 100 மில்லி அளவுள்ள 200 பாக்கெட்டுகளை (20 லிட்டர்) போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago