மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
7 minutes ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
11 minutes ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
14 minutes ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
16 minutes ago
புதுச்சேரி, : புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீ சார் மோப்ப நாயுடன் நடத்திய திடீர் சோதனையில் 55 கிராம் கஞ்சா சிக்கியது.புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் லோக்கல் பஸ்களில் பணியாற்றும் சில உள்ளூர் ரவுடிகள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போதை பொருள் தடுப்பு பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ஜாகிர்உசேன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஏ.எப்.டி., திடலில் இயங்கும் புதிய பஸ் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.அப்போது, போதை பொருட்களை கண்டறியும் மோப்ப நாய் பைரவா துணையுடன் பஸ்கள் மற்றும் பஸ் நிலைய வளாகம் முழுதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை பஸ்கள் புறப்படும் இடம் அருகே காகிதத்தில் மடித்து கிடந்த மர்ம பொருளை மோப்ப நாய் பைரவா கண்டறிந்தது.போலீசார் காகிதத்தில் மடிக்கப்பட்டு கிடந்த பொருளை பிரித்து பார்த்தபோது அதில் 55 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொள்வதை அறிந்து கஞ்சா ஆசாமிகள் சாலையில் கஞ்சாவை வீசி சென்றது தெரியவந்தது.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கஞ்சா ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
7 minutes ago
11 minutes ago
14 minutes ago
16 minutes ago