மேலும் செய்திகள்
பஸ் - மினி லாரி மோதல்; 12 பயணியர் காயம்
28-Aug-2024
பாகூர்: விழுப்புரம் மாவட்டம் பள்ளிபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் மனைவி அபிதா 24; இவர் கடந்த 12ம் தேதி பி.ஒய்.01 பி.ஆர் 2727 என்ற பதிவெண் கொண்ட தனியார் பஸ்சில், பயணம் செய்து கொண்டிருந்தார். கரியமாணிக்கம் சென்ற போது, கூட்ட நெரிசல் காரணமாக பஸ் குலுங்கியது இதில் எதிர்பாராத விதமாக பின் இருக்கையில் அமர்ந்திருந்த அபிதாவின் கை ஜன்னலுக்கு வெளியே சென்றது, அப்போது அங்கு நின்றிருந் டாடா ஏஸ் வாகனத்தின் மீது கை மோதி எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28-Aug-2024