மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவம் நேற்று நடந்தது.வில்லியனுார், கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினசரி காலை சிறப்பு அபிேஷகம், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்டசுவாமி மாட வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழா கடந்த 6ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா நடந்தது. நேற்று புதுச்சேரி மாநில அனைத்து மீனவர் குல மரபினர்களின் தெப்ப உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு மாலை கோகிலாம்பிகைக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை விழாக்குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ வரவேற்றார். ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமீஸ்வரன் தலைமையில் உற்சவதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago