உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பக்கவாத சிகிச்சையில் அபரீத வளர்ச்சி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் தகவல்

பக்கவாத சிகிச்சையில் அபரீத வளர்ச்சி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் தகவல்

புதுச்சேரி: பக்கவாத சிகிச்சையில் அபரீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சீனிவாசன் பரமசிவம் தெரிவித்தார்.இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை, சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கம் ஓட்டல் ஆனந்தா இன்னில் நடந்தது. பொது செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் சுதாகர் முன்னிலை வகித்தார்.சிறப்பு அமர்வில் சென்னை அப்போலோ மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சீனிவாசன் பரமசிவம் பேசியதாவது: பக்கவாதம் ஐந்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது. பக்கவாதத்திற்கு கடந்த 20 ஆண்டுகளில் அபரீத சிகிச்சை வளர்ந்துள்ளது. அடைப்பு ஏற்பட்ட ரத்த குழாயில் இருந்து அடைப்பை நீக்கி குணப்படுத்த முடியும். குறிப்பாக 24 மணி நேரம் வரை இந்த சிகிச்சை பெற முடியும். பெறு மற்றும் சிறு ரத்த குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க முடியும்' என்றார்.தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர் செல்வி, நரம்பியல் சிகிச்சை நிபுணர் விஜயசங்கர் ஆகியோர் டாக்டர்களிடம் கலந்துரையாடி சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை