உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளஸ் 2 தேர்வில் ஏ.கே.டி., பள்ளி சிறப்பிடம் பெற்று சாதனை

பிளஸ் 2 தேர்வில் ஏ.கே.டி., பள்ளி சிறப்பிடம் பெற்று சாதனை

கள்ளக்குறிச்சி : பிளஸ் 2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.பிளஸ் 2 தேர்வில், ஏ.கே.டி., பள்ளியில் மாணவர் அவினாஷ் 600க்கு 587 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் பாடவாரியாக தமிழ்- 98, ஆங்கிலம் -96, இயற்பியல் -99, வேதியியல்- 98, உயிரியல்- 98, கணிதம்- 98 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி பாரதி 586 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றார். இவர் தமிழ் -99, ஆங்கிலம் -96, இயற்பியல் -95, வேதியியல் -96, கணினி அறிவியல்- 100, கணிதம்- 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.மாணவி ஜெயபிரியா 585 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் -96, ஆங்கிலம்- 89, பொருளியல்- 100, வணிகவியல் -100, கணக்கு பதிவியல் -100, கணினி பயன்பாடு -100 மதிப்பெண் பெற்றுள்ளார்.மேலும், 580க்கு மேல் 3 மாணவர்களும், 570க்கு மேல் 10 பேர், 560க்கு மேல் 27 பேர், 550க்கு மேல் 48 பேர், 500க்கு மேல் 186 பேர், 450க்கு மேல் 401 பேர், 400க்கு மேல் 625 பேர், 350க்கு மேல் 761 பேர், 300க்கு மேல் 854 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.கணிதம் பாடத்தில் 10 பேர், இயற்பியல் -1, வேதியியல் -1, கணினி அறிவியல் - 11, வணிகவியல் -1, கணக்குப் பதிவியல் -1, பொருளியல் -1 என மொத்தம் 26 பேர் 'சென்டம்' மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 38 பேர் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ மாணவிகள் மற்றும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ