மேலும் செய்திகள்
மின் கட்டண உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்
31-Jul-2024
புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போராட்டத்திற்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவை தலைவர் அன்பானந்தம், மாநில ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கோஷங்கள் எழுப்பினர்.அன்பழகன் கூறியதாவது; பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி அரசு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தும் சோதனை மாநிலமாக புதுச்சேரியை நடத்தி வருகிறது. 2 மாதத்திற்கு முன்பு அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியது. முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர், மின் கட்டண உயர்வு திரும்ப பெறப்படும் என அறிவித்தனர்.ஆனால் திடீரென மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் முன் தேதியிட்டு வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது மோசடி செயல். இந்த அரசு ஏழை எளிய, சிறு ,குறு வியாபாரிகளை பற்றி கவலைப்படாமல் மின் கட்டணம் உயர்த்தி துரோகம் இழைத்துள்ளது.உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் கட்டண உயர்வை மானியமாக வழங்க வேண்டும் என கூறினார்.இணை செயலாளர் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, இணை செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மங்கலம் தொகுதி செயலாளர் தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
31-Jul-2024