உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபர் தற்கொலை; போலீசார் விசாரணை

வாலிபர் தற்கொலை; போலீசார் விசாரணை

அரியாங்குப்பம் : மரம் ஏறி தொழில் செய்து வந்த வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தேங்காய்த்திட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மகன் சத்தியசீலன், 23; இவரது பெற்றோர் இருவரும் இறந்து விட்டனர். தனது தாத்தா பராமரிப்பில் இருந்த அவர் தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார். நண்பர்களுடன் டூர் சென்று விட்டு வேலைக்கு செல்லாமல் சோகமாக வீட்டில் படுத்திருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற நிலையில் அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, அவரது சகோதரர் சத்தியராஜ் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை