வழக்கறிஞர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி வழக்கறிஞர் சசிபாலன் பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.உழவர்கரை தொகுதி வழக்கறிஞர் சசிபாலன். பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது பிறந்த நாளையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து, உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. பாவாணன் நகர், பிச்சவீரன்பேட், கம்பன் நகர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கம்பன் நகர் கருணை இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக பிச்சவீரன் பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள், பெண்களுக்கு இலவச புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடப்பாக்கம் கோபு, வழக்கறி ஞர் ராஜ்குமார், சசிபாலன் பாசறை நிர்வாகிகள் பங்கேற்றனர்.