உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வட்டியுடன் சம்பளம் வழங்க ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை

பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வட்டியுடன் சம்பளம் வழங்க ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை

புதுச்சேரி : உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 18 சதவீத வட்டியுடன் நிலுவை சம்பளம் வழங்க அரசுக்கு ஏ.ஐ.டி.யூ.சி., மாநிலச் செயலாளர் சேது செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் பாப்ஸ்கோ 1992ம் ஆண்டு துவங்கப்பட்டது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு 77 மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருக்கிறது. முதல்வர் ரங்கசாமி 5 பேர் கொண்ட கமிட்டியை நியமித்து, பாப்ஸ்கோ நிறுவனத்தை நடத்துவது தொடர்பாக தெரிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான முடிவு எடுக்கவில்லை. அமைச்சர் சாய் சரவணன்குமாரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய போது, நிலுவை சம்பளத்தை வழங்குவதாகவும். பாப்ஸ்கோ நிறுவனத்தை நடத்துவதாகவும் எழுத்து மூலம் உத்தரவாதம் அளித்தார். அதை அவர் செய்யவில்லை. மேலும், 130 நிரந்தர ஊழியர்கள், 6 பணி ஓய்வு பெற்றவர்கள், 6 வாரிசுதாரர்கள் என மூன்று தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த கோர்ட், 18 சதவீத வட்டியுடன் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் இ.பி.எப்., உள்ளிட்டவற்றை அரசு வழங்க வேண்டும் என கடந்த 8ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. கோர்ட் உத்தரவை முதல்வர் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ