உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஐ.டி.யு.சி., நிவாரணம் வழங்கல்

வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஐ.டி.யு.சி., நிவாரணம் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவு மற்றும் பெரும் வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, புதுச்சேரி ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், ரூ.8 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் திரட்டப்பட்டன. மேலும், ரூ.1 லட்சம் அளவுக்கு நிதியும் திரட்டப்பட்டது. நிவாரணப் பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டு, புதுச்சேரி ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் சேதுசெல்வம், புதுச்சேரி பெரிய மார்க்கெட் சங்க கவுரவ தலைவர் சுப்ரமணி ஆகியோர் கடந்த 12ம் தேதி வயநாட்டுக்கு புறப்பட்டனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கினர். கேரள மாநில ஏ.ஐ.டி.யூ.சி., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை