வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அழியப் போகும் இரட்டை இலையின் சில்லரைத் தனமான செயல்
மேலும் செய்திகள்
அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு
27-Aug-2024
புதுச்சேரி : புதுச்சேரியில், தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை உருவப்படத்தை, அ.தி.மு.க.,வினர் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமியை தரக்குறைவாக பேசிய பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து, நேற்று புதுச்சேரி, உப்பளத்தில் அ.தி.மு.க.,வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அ.தி.மு.க.,வினர் அண்ணாமலை உருவப்படத்தை தீயிட்டு எரித்து கோஷமிட்டனர்.இது குறித்து அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது: அ.தி.மு.க, பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி பேச, பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. கடந்த, 2021ம் ஆண்டு, ஜூலை 8ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவராக பதவி ஏற்ற அண்ணாமலை, கடந்த 2019ம் ஆண்டு அரசு அதிகாரியாக பணியில் இருந்தவர். மறைந்த மற்றும் தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
அழியப் போகும் இரட்டை இலையின் சில்லரைத் தனமான செயல்
27-Aug-2024