அரசு பள்ளியில் பாராட்டு விழா
புதுச்சேரி: வில்லியனுார் விவேகா னந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற வேதியியல் விரிவுரையாளர் முரளிக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.விரிவுரையாளர் வேல்முருகன் வரவேற்றார்.பள்ளி துணை முதல்வர் ரவி தலைமை தாங்கினார். பள்ளி கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் அப்துல் மாலிக், விரிவு ரையாளர்கள் செல்வன், குமரன், ரேவதி மற்றும் பட்டதாரி ஆசிரியர் நாகப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற முரளிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.