உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரிக் ஷா தொழிலாளி கொலை வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதி

ரிக் ஷா தொழிலாளி கொலை வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி: சைக்கிள் ரிக் ஷா தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் கைதானவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 60; சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் தொழிலாளி. கண் பார்வை பாதிக்கப்பட்டதால், கடந்த 3 ஆண்டுகளாக சைக்கிள் ரிக் ஷா ஓட்டாமல், செஞ்சி சாலையோரத்தில் தங்கியிருந்தார். கடந்த 4ம் தேதி அதிகாலை பழைய சட்டக்கல்லுாரி பின்புற பிளாட்பாரத்தில் முருகன் தலையில் கான்கிரீட் கல்லை போட்டு மர்ம நபர் கொலை செய்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, நெட்டபாக்கம் அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்த சித்தானந்தன், 37; என்பவர் முருகனிடம் பீடி கேட்டு தராத கோபத்தில், தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட சித்தானந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சித்தானந்தனை மருத்துவ குழு பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் பரிசோதனையில், சித்தானந்தன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, சித்தானந்தன் சிகிச்சை பெற சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ