மாணவர் மீது தாக்குதல்
அரியாங்குப்பம் : மாணவரை மட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் புத்துப்பட்டான் மகன் ஹேமச்சந்திரன், 19, இவர் காலாப்பட்டு அரசு பொறியியல் கல்லுாரியில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம், பூரணாங்குப்பம் சடாநகர் அருகே தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பைக்கில் மோதுவது போல வந்தார். அதனை தட்டி கேட்டதால் ஆத்திரமைடைந்த ,வெங்கடேசன், மாணவரை மட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை தேடிவருகின்றனர்.