உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோலார் பேனல் அமைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்

சோலார் பேனல் அமைப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்

அரியாங்குப்பம் : பிரதமரின் சூரிய வீடு, இலவச மின்சார திட்டத்தின் கீழ், சோலார் பேனல் அமைப்பது தொடர்பாக, அரியாங்குப்பத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.மின்துறை மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி முகமை சார்பில், வீடுகளின் மேற் கூரையில் சோலார் பேனல் அமைப்பது குறித்து, அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. மின்துறை கேபிள் மற்றும் தொழில் பயிற்சி செயற்பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். உதவிப்பொறியாளர்கள் சசிக்குமார், சக்திவேல், அரியாங்குப்பம் இளநிலை பொறியாளர் லுார்து உட்பட மின் ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.வீட்டின் மேற்கூரையில், சோலார் பேனல் அமைப்பதன் பயன்கள் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், இதுவரை 615 நுகர்வோர் வீட்டின் மேற்கூரைகளில் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு 3.86 கோடி ரூபாய் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என, மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை